சென்னை:தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (டிச.9) காலை 9.30 மணியளவில் துவங்குகிறது. மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். மேலும், சமீபத்தில் மறைந்த ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வினா விடை நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வு நடைபெறும். அதன் பின்னர், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024 - 2025 ஆம் ஆண்டின் கூடுதல் செலவினத்திற்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து, அரசின் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.