சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்குச் சென்றார். இந்த பயணமானது 17 நாட்கள் இருக்கும் நிலையில், முதல்வர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
அனைவரின் கவனத்தை ஈர்த்த முதல்வர் பயணத்தில், நாம் கடந்து சென்ற பகுதி பரிசு வழங்குதல் எனக் கூறலாம். முதலமைச்சர் ஸ்டாலின், தான் சந்திக்கும் அனைத்து விருந்தினருக்கும் ஒரு பரிசுப் பெட்டகத்தை தமிழகத்தில் வழங்கி பார்த்திருப்போம். ஆனால், நேற்று அவர் அந்த பரிசுப்பெட்டகத்தை அமெரிக்க முதலீட்டார்களிடம் கொடுத்து, அந்த பரிசுப்பெட்டகத்தில் என்னதான் உள்ளது என அனைவரின் ஆர்வத்தையும் தூண்ட வைத்துவிட்டது எனலாம்.
இவ்வாறு முதல்வர் அனைவருக்கும் பரிசாக வழங்கும் பெட்டகத்தில் என்னதான் இருக்கிறது? என்பதை இந்த தொகுப்பில் காணலாம். அமெரிக்க முதலீட்டாளர்கள் முதல் தமிழக விருந்தினர்கள் வரை முதலமைச்சர் பரிசளிப்பது “தடம்”. இந்த தடம் என்பது தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களை ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த பொருட்களை நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியின் கீழ் இந்த செயல்பாடு நடந்து வருகிறது.
தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில், பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் இந்த பொருட்களை முதல்வர் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிறார்.