சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த சட்டப்பேரவையில் இரண்டு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. BNS, BNSS மாநில சட்ட திருத்தம் மற்றும் தமிழ்நாடு 1998 ஆம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவிக்கும் தடை சட்டம் ஆகிய சட்ட திருத்தம் சட்ட பேரவையில் முன் வைக்கப்பட்டது. மேற்கண்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் திருத்த சட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவிக்கும் தடை திருத்த சட்டம் என இரண்டிலும் உட்சபட்ச தண்டனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பிரிவு - 64 (1) - பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனையாக திருத்தப்பட்டுள்ளது. அதே சமயம், குற்றவாளியின் கடுங்காவல் ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில், இயற்கையாக மரணிக்கும் வரையில் சிறையில் காலத்தை கழிக்க வேண்டும். மேலும், இவ்வழக்கில் பிணை வழங்கப்படாது.
பிரிவு 65 (2) - 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை இருந்து வந்த நிலையில், தற்போது ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். ஒரு கால அளவிற்கு அபராதம் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இதையும் படிங்க:"பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000" - அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!