தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஃப்ஐஆர் வெளியாக காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்...தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவு! - NATIONAL COMMISSION FOR WOMEN

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய தலைவி விஜயா ரஹத்கர்
தேசிய மகளிர் ஆணைய தலைவி விஜயா ரஹத்கர் (Image credits-@VijayaRahatkar x post)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 9:52 PM IST

சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்டவற்றை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு (Image credits-NCW@XPOST)

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகல் வெளியாகி உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானாதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு (Image credits-NCW@XPOST)

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவி விஜயா ரஹத்கர் வெளியிட்ட உத்தரவில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பாலியல் பலாத்காரம் நடைபெற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாக கூடாது என உத்தரவு இருக்கும் நிலையில் மாணவி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி? மேலும் மாணவியை பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப்பிரிவு BNS 71ஐ சேர்க்க வேண்டும். மேலும் குற்றவாளியான ஞானசேகரன் மீது தமிழக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு (Image credits-NCW@XPOST)

தமிழக போலீசாரின் அலட்சியம் காரணமாக கொடும் குற்றத்தில் ஞானசேகரன் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவது கவலை அளிக்கிறது. மேலும் இந்த கொடும் குற்றச் செயலுக்கு வன்மையான கன்னடங்களை தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண் உடன் நீதி கிடைக்க உடன் நிற்ப்போம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்,"எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது,


ABOUT THE AUTHOR

...view details