தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மூன்று பயணங்களும் தோல்வி; இப்போ ஏதாவது வருமா?" -முதல்வரின் வெளிநாடு பயணத்தை விமர்சித்த அண்ணாமலை! - annamalai criticized EPS

Annamalai : தான் லண்டன் சென்றாலும் தன் இதயம் இங்கே தான் இருக்கும். தனது சண்டைகள் தொடரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேட்டி
அண்ணாமலை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 9:59 PM IST

சென்னை : சென்னை எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எச்.வி.ஹண்டே அவர்கள் எழுதிய Our Constitution Distortions Done By Indira Gandhi During Emergency எனும் புத்தகத்தையும், அண்ணல் அம்பேத்கர் என்கிற புத்தகத்தையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

அண்ணாமலை பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

பின்னர் மேடையில் பேசிய அவர், "பிரதமர் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதை போல, ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் அரசியல் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அவர்களால் உடனடியாக தீர்வு கிடைக்காது.

20 ஆண்டுகள் கழித்து பெரும் பயன் கிடைக்கும். ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளியை குறைக்க அந்த இளைஞர்கள் உழைப்பார்கள். அம்பேத்கரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சில அரசியல் கட்சிகள் அடைக்கப் பார்த்தார்கள்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை அம்பேத்கர் எதிர்த்தார். அம்பேத்கர் பிரிவினை வாதத்திற்கு எதிராக இருந்தார். அம்பேத்கர் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் அம்பேத்கர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை வழங்க வேண்டாம் என்று சொன்னதை மறந்து விட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எடப்பாடி மீது நான் வைத்த விமர்சனம் 100 சதவிகிதம் உண்மை. நான் அதில் பின்வாங்க மாட்டேன். நீங்கள் எல்லாம் என்னை கொச்சைப்படுத்தலாம், ஆட்டை வெட்டலாம், அதற்கு எல்லாம் நான் நகர்ந்து கொண்டு செல்ல வேண்டுமா?. நான் இங்கு அரசியல் செய்ய வந்திருக்கேன். சில விஷயங்களில் அரசியலில் நமக்கென்று ஒரு பாணி உள்ளது.

விடிய, விடிய படித்த எனக்கும், விடிய விடிய விவசாயம் பார்த்த எனக்கு தான் நான் கஷ்டப்பட்டு வந்துள்ளேன் என்பது தெரியும். அதிமுக அமைச்சர்கள் நேற்று முதல் குமுறுகிறீர்கள். அவர்கள் எல்லாம் இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்?

39 வயது அண்ணாமலையை விடுங்கள். 70 வயது உள்ள எடப்பாடி பழனிசாமி அனுபவம் உள்ள நபர் அவர் பேசியது சரியா? அதிமுகவில் சில தலைவர்கள் 70 வயதிலும், டை அடித்துக் கொண்டு இளைஞர்கள் என சொல்கிறார்கள். டை அடிப்பவர்கள் எல்லாம் இளைஞர்கள் இல்லை.

பிரதமர் விருப்பம் இளைஞர்கள் எல்லா இடங்களுக்கும் வர வேண்டும். பாஜகவில் 35 வயது உட்பட்டவர் மட்டுமே இளைஞரணி தலைவராக முடியும். ராகுல் காந்தி இளைஞரணி தலைவரா? ஸ்டாலின் இளைஞரணி தலைவரா? உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவரா? பிரதமர் என்பவர் உள்ளத்தின் அளவில் இளைஞர் தான். அவரது செயல்பாடுகளை விமர்சனம் செய்யுங்கள்.

பிரதமர் சுதந்திர தின விழாவில் எந்தவித அரசியல் பின்புலம் இல்லாதவர்கள் 1 லட்சம் பேரை கட்சியில் இணைக்க வேண்டும் என பேசினார். செப்டம்பர் 1ம் தேதி பாஜக முதல் உறுப்பினராக பிரதமர் இணைய உள்ளார்.
நான் லண்டன் சென்றாலும் இதயம் இங்கே தான் இருக்கும், கண் இங்கே தான் இருக்கும். இன்று இரவு நான் எனது மேல் படிப்புக்காக லண்டன் செல்ல இருக்கிறேன். மூன்று மாதம் காலம் வெளிநாட்டிலிருந்து எனது சண்டைகள் தொடரும்.

ஒவ்வொரு கிராமத்திற்கு பாஜக பயணம் சென்று கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும். செப்டம்பர், அக்டோபர் முழுவதுமாக இந்த பணியை பாஜக செய்ய உள்ளது. இதற்காக ஒரு அலைபேசி எண் கொடுக்கப்படும். உங்கள் வீட்டிற்கே பாஜக தொண்டர்கள் வருவார்கள், நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

முதல் மூன்று பயணங்களும் தோல்வி பயணங்களாக தான் பார்க்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம், முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு ஏதாவது நிதி கொண்டு வராரா என்று பார்ப்போம். முதலமைச்சரை பொறுத்தவரை சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய பயணங்களில் ஒன்றும் இல்லை. எதற்கு அமெரிக்கா செல்கிறார்?

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு REA மூலம் ரூ.5,000 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாநில அரசு PM Shri பள்ளிக்கூடம் வேண்டும் என கேட்கிறார்கள் ஆனால் கையெழுத்து போடவில்லை. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கல்விக் கொள்கை காரணமாக அவர்கள் கையெழுத்து போடவில்லை.

லண்டன் சென்று வரும்போது தலைவராக வருவீர்களா என்ற கேள்விக்கு, தலைவர் பதவி என்பது ஏற்கனவே நான் குறிப்பிட்டதை போல வெங்காயம் போன்றது தான். உரித்தால் ஒன்றும் இருக்காது. பிரதமர் அனுமதி கொடுத்து வெளிநாடு அனுப்புகிறார்கள். இது பாஜக படிப்பிற்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவமாகவே பார்க்க வேண்டும்”என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :"அரசியல்வாதிகள் வயதானால் அனுபவத்தோடு செயல்படுவர்"..ரஜினி - துரைமுருகன் சர்ச்சை குறித்து அப்பாவு கருத்து! - Speaker Appavu

ABOUT THE AUTHOR

...view details