தமிழ்நாடு

tamil nadu

மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களின் சிறை காவல்; இலங்கை நீதிமன்றம் கறார்! - tamilnadu fishermen in Srilanka

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 5:32 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 42 மீனவர்களின் சிறை காவலை மூன்றாவது முறையாக நீட்டிப்பு செய்து இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றம் - கோப்புப்படம்
இலங்கை நீதிமன்றம் - கோப்புப்படம் (Image Credit - ETV Bharat Tamilnadu)

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 42 மீனவர்களின் சிறை காவலை மூன்றாவது முறையாக நீட்டிப்பு இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாம்பன் மற்றும் நம்புதாளை, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மல்லிபட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி மீன் பிடிக்க சென்று 43 மீனவர்களை நெடுந்தியூர் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

அவர்களது வழக்கை விசாரித்த ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி, மூன்றாவது முறையாக வரும் 30 ம் தேதி வரை அவர்களை சிறை காவலில் வைக்க, ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதனால், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த அவர்களின் உறவினர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்..

இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேருக்கு வருகின்ற 30 ஆம் தேதி வரை சிறை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த மாதம் 18.06.24 மற்றும் 11.7.24 ஆம் தேதி, மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை 4 விசைப்படகையும் அதிலிருந்த 17 மீனவரையும் சிறைபிடித்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றது.

இந்த நிலையில் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு நாளை வரை (ஜூலை 30) சிறைக் காவலை நீட்டிப்பு செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: இலங்கை அதிபர் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details