தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவராத்திரி விடுமுறை: சென்னையில் இருந்து தஞ்சை, திண்டுக்கல் வழியாக கோவைக்கு சிறப்பு ரயில் - NAVRATRI HOLIDAY SPECIAL TRAIN

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக கோயம்புத்தூருக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 9:18 PM IST

சென்னை:நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக கோயம்புத்தூருக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

தாம்பரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில்:அதன்படி தாம்பரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06184) அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.10 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில் (06185) அக்டோபர் 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இதையும் படிங்க:தாம்பரம் - கொச்சுவேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பபு

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரி புலியூர் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதையும் படிங்க:சென்னையில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவில்,கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details