தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சம்மர் ஸ்பெஷல் ரயில் சேவை.. தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! - Summer special trains - SUMMER SPECIAL TRAINS

Summer Special Trains: வார இறுதி மற்றும் கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Summer Special Trains
Summer Special Trains

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 2:56 PM IST

சென்னை: வார இறுதி கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், மங்களூரு சென்ட்ரல் மற்றும் கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (ஏப்.20) மற்றும் வருகின்ற 27ஆம் தேதியும், மே 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளும், ஜூன் 01ஆம் தேதிகளில் ரயில் எண் 06075 மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 7.30 மணிக்கு கோட்டயம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, மறுமார்க்கமாக, ரயில் எண் 06076 மேலே குறிப்பிட்டுள்ள அதே தேதிகளில் கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோடை காலத்தில் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில், இன்று (ஏப்.20) தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஏப்.20) மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் மற்றும் மதுரை வழியாக நாளை அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த வகையில், தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த சிறப்புப் பயணிகள் ரயில், இன்று (ஏப்.20) காலை 5.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இன்று (ஏப்.20) மதியம் 1.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலே குறிப்பிட்டுள்ள ரயில்களுக்கேற்ப பயணிகள் தங்களது பயணத்திட்டத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளும்படியும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்.. முகவர்கள் மறுத்த விவகாரத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details