சென்னை: கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கிச் செல்லக் கூடிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று இரவு 8.30 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாது.
அந்த விபத்தில், 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 2 ஏசி பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கிய பத்திரமாக பயணிகளை மீட்டுனர். அதனைத் தொடர்ந்து, ரயில் சீரமைப்புப் பணிகள் விடிய விடிய தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது வரை விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை எனவும், காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவின் பேரில், உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாக்மதி ரயில் விபத்தைத் தொடர்ந்து, 2 இருப்புபாதை மார்க்கத்திலும் ரயில்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இயங்கவுள்ள 18 ரயில்களின் சேவைகளை ரத்து செய்தும், சில ரயில்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட 18 ரயில்களின் விவரம்:
- திருப்பதி - புதுச்சேரி MEMU ரயில் (வண்டி எண்.16111)
- புதுச்சேரி - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.16112)
- சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16203)
- திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16204)
- சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16053)
- திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16054)
- சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16057)
- திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16058)
- அரக்கோணம் - புதுச்சேரி MEMU ரயில் (வண்டி எண்.16401
- கடப்பா - அரக்கோணம் MEMU ரயில் (வண்டி எண்.16402)
- சென்னை சென்ட்ரல் - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.06727)
- திருப்பதி - சென்னை சென்ட்ரல் MEMU ரயில் (வண்டி எண்.06728)
- அரக்கோணம் - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.06753)
- திருப்பதி - அரக்கோண்டம் MEMU ரயில் (வண்டி எண்.06754)
- விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12711)
- சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12712)
- சூலூர்பேட்டை - நெல்லூர் MEMU ரயில் (வண்டி எண். 06745)
- நெல்லூர் - சூலூர்பேட்டை MEMU ரயில் (வண்டி எண். 06746)
மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்ட ரயில்கள் விவரம்:
- கன்னியாகுமரி - நிசாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12641)
- சென்னை சென்ட்ரல் - லக்னோ சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16093)
- அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12655)
- பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.22644)
- சென்னை சென்ட்ரல் - நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12611)
- ஹவுரா கிளம்பிய சென்னை சென்ட்ரல் ரயில் (வண்டி எண்.12839)
- புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12616)
- காக்கிநாடா துறைமுகம் - செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.17644) உள்ளிட்ட பல ரயில்களின் பாதையை தெற்கு ரயில்வே மாற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருவள்ளூர்: சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதிய பாக்மதி எக்ஸ்பிரஸ்.. மீட்பு பணி தீவிரம்!