சென்னை: சென்னையில் உள்ள செம்மஞ்சேரி தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் 14 வயது சிறுமி. பெற்றோரால் கைவிடப்பட்ட இவர் , மற்றொரு பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் சகோதரியும், அவரது மாமியாரும் சேர்ந்து கொண்டு 14 வயது சிறுமியை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக இது குறித்து சென்னை சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடினர்.
14 வயது சிறுமியை மீட்ட நிலையில் அவர் போலீசாரிடம் தனது கண்ணீர் கதையை வாக்குமூலமாக அளித்துள்ளார். இதன்படி, பெற்றோரால் கைவிடப்பட்ட தன்னை அழைத்து வந்த உறவினர் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளியதாகக் கூறியுள்ளார். இந்த குடும்பம் ஏற்கெனவே விபச்சாரத்தை தொழிலாக செய்து வருவதால், அவர்களின் தொடர்பில் இருந்த வாடிக்கையான நபர்களுக்கு சிறுமி விருந்தாக்கப்பட்டுள்ளார்.