தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூங்கிய டிரைவர்.. நெல்லையில் தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 35 பேர் படுகாயம், ஒருவர் பலி! - NELLAI OMNI BUS ACCIDENT

நெல்லையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயணிகள் 35 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து
விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2025, 4:44 PM IST

திருநெல்வேலி: நெல்லையில் ஆம்னி பேருந்து விபத்தில் 35 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து ஆம்னி பேருந்து ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 37 பேர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த பேருந்து இன்று காலை திருநெல்வேலி, பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறி தலை கீழாக பேருந்து கவிழ்ந்தது.

இதையும் படிங்க:ஆசிரியை பணி நியமனத்துக்கு கூகுள் பே-வில் லஞ்சம்.. பள்ளி துணை ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்..!

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் பேருந்தில் சிக்கி படுகாயம் அடைந்த 35 பேரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், இந்த பேருந்தில் பயணம் செய்த பிரிஸ்கோ என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து பேருந்தின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முதல் கட்டமாக பேருந்தின் ஓட்டுனர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details