புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டக் கிளைச் சிறையில் 450-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று(திங்கட்கிழமை) மதியம் வழங்கப்பட்ட சிக்கனுடன் கூடிய உணவால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளான தஞ்சையைச் சேர்ந்த செங்கோல்சேசு (42), அறந்தாங்கியைச் சேர்ந்த உலகநாதன் (55), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராமு (44), தஞ்சையைச் சேர்ந்த நேரு (57), ஆலங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி (58), ஒரத்தநாட்டைச் சேர்ந்த செல்வம் (31), மணமேல்குடியைச் சேர்ந்த அஜிக்குமார் (28) ஆகிய 7 பேருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிறையில் முதலுதவி சிகிச்சை அளித்தும் வயிற்றுப்போக்கு பிரச்சனை தீராததால் இவர்கள் ஏழு பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகளுக்கு உணவு ஒவ்வாமையால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறையிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பிறர் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்