தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வார விடுமுறை கூடுதல் பேருந்துகள் இயக்கம்; முழு விபரம் இதோ! - SETC Announce Weekend Special Bus - SETC ANNOUNCE WEEKEND SPECIAL BUS

SETC Announce Weekend Special Bus: நாளை மறுநாள் செப்.20, செப்.21, செப்.22 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 8:41 PM IST

சென்னை:நாளை மறுநாள் செப்.20 (வெள்ளிக்கிழமை), செப்.21 (சனிக்கிழமை), செப்.22 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கும் பேருந்துகளைவிட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்.20 (வெள்ளிக்கிழமை) அன்று 260 பேருந்துகளும், செப்.21(சனிக்கிழமை) 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்.20 வெள்ளிக்கிழமை அன்று 65 பேருந்துகளும், செப்.21 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் மாதாவரத்திலிருந்து செப்.20 அன்று 20 பேருந்துகளும் செப்.21 அன்று 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்நிலையில் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,730 பயணிகளும், சனிக்கிழமை 2,706 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,312 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

மேலும் இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details