தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 46வது முறையாக நீட்டிப்பு! - Senthil Balaji judicial custody - SENTHIL BALAJI JUDICIAL CUSTODY

Senthil Balaji Judicial custody: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 16ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Senthil Balaji
செந்தில் பாலாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 7:27 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது.

இதனால் புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை முதனமை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 16ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 46வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது ஜூலை 16-ல் தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details