தென்காசி: தென்காசி மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் வாய்க்கால் பாலம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வருகை தந்த நிலையில் அவருக்கு மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செயல் வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை பேசுகையில், '' திருநெல்வேலி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கிய நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்களுடைய பிரச்சினையை கையில் எடுக்காததே காரணம் எனது தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடு மோசமான நிலைமைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் பாஜக அரசு அடுத்த தலைமுறையை சீர்குலைக்க வேண்டும் என செயல்படுவதாக விமர்சித்தார்.
இதையும் படிங்க:எங்கே சென்றார் சம்போ செந்தில்? மாமூல் லிஸ்ட்டை தேடும் போலீசார்!
மேலும், பாஜக அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சரியாக நிதியை பிரித்து கொடுப்பதை விட்டுவிட்டு, யார் ஆட்சி பொறுப்பிற்கு தேவையோ அந்த வகையில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு லட்சக்கணக்கான கோடி நிதிகளை ஒதுக்கி உள்ளது. இவ்வாறு செயல்படக்கூடிய பாஜக அரசை விரட்டியடிக்க காங்கிரஸ் வலிமையான இயக்கமாக உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், '' ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் பல கோணங்களில் தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக போலீசார் ஸ்காட்லாந்துக்கு இணையான காவல் துறை என பெயர் பெற்றவர்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறை கோட்டை விட மாட்டார்கள் எனவும் உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தடயங்களை சேகரிக்க போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட 4 பேர்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்த நகர்வு