தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் தபால் வாக்கு முடிவுகள் எப்போது தெரியவரும்? - சத்யபிரதா சாகு கூறுவது என்ன? - lok sabha election result 2024 - LOK SABHA ELECTION RESULT 2024

Tamil Nadu Chief Electoral Officer SatyaPratha Sahoo: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

சத்யபிரத சாகு புகைப்படம்
சத்யபிரத சாகு புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 6:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் சென்றடைந்து விட்டனர். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் சரியாக 8 மணிக்கு திறக்கப்படும். முதலில் தபால் வாக்கு எண்ணப்படும். அதிகளவிலான தபால் வாக்குகள் இருக்கும் இடங்களில் தேவைப்பட்டால் தனி அறையில் எண்ணப்படும்.

தபால் வாக்குகளின் முடிவுகள் அங்குள்ள தகவல் பலகையில் தெரிவிக்கப்படும். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் பணியும் தொடங்கி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், ஒவ்வொரு சுற்றுகளிலும் பெற்ற வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அலுவலர் அறிவிப்பார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பார்கள்.

செய்தியாளர்கள் வாக்கு எண்ணும் இடம் தவிர்த்து மற்ற இடங்களிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தொலைபேசி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் 30 மேஜைகள், கோயம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளைம் 20 மேஜைகள், பல்லடம் 18 மேஜைகள் மற்ற இடங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மதுரை நாடாளுமன்றத் தொகுதி; வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் என்ன? - Lok Sabha Election Results 2024

ABOUT THE AUTHOR

...view details