சேலம்: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் 5,66,085 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ப.விக்னேஷ் 4,95,728 வாக்குள் பெற்று தோல்வியை தழுவினார்.
வ.எண் | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
1. | திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி(வெற்றி) | 5,66,085 |
2. | அதிமுக வேட்பாளர் ப.விக்னேஷ் | 4,95,728 |
3. | பாமக வேட்பாளர் என். அண்ணாதுரை | 1,27,139 |
4. | நாதக வேட்பாளர் டாக்டர் மனோஜ்குமார் | 76,207 |
- வாக்கு எண்ணிக்கையின் போது, சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 2,15,402 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 1,85,373 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 50,730 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் 30,174 வாக்குகளும் பெற்றனர். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 30,029 வாக்குகள் முன்னிலை வகித்தார். - 03.57 PM நிலவரம்.
- சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 1,00,027 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 84,706 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 23,888 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் 13,368 வாக்குகளும் பெற்றனர். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 15,321 வாக்குகள் முன்னிலை வகித்தார். - 02.43 PM நிலவரம்.
- சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 30,265 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 23,740 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 8,121 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் 3,957 வாக்குகளும் பெற்றனர். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 6,525 வாக்குகள் முன்னிலை வகித்தார்.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக புதிய முகம் விக்னேஷ், திமுக வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினர்.
திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட டி.எம்.செல்வகணபதி, அதிமுகவில் இருந்த காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், அமைச்சராகவும் அரசியல் களத்தில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அவர் திமுகவிற்கு வந்த பிறகு, ஊழல் வழக்கில் சிக்கி தேர்தலில் பங்கேற்க முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வந்தார். இந்நிலையில், ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதையடுத்து தற்போது இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளார்.