தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர்களுக்கான நன்னடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்.. திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்! - DMK MPS MEETING

மத்திய பட்ஜெட் 2025-26 இல் தமிழ்நாட்டில்ஆளுநர்களுக்கான நன்னடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என திமுக எம்பி-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக எம்பி-க்கள் கூட்டம்
திமுக எம்பி-க்கள் கூட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 2:51 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.29) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் டெல்லியில் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களுக்கான நிதி, பேரிடர் நிதி உள்ளிட்டவற்றை ஒதுக்கீடு செய்யதிடக்கோரி திமுக எம்பி-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானங்கள்:

ஆளுநருக்கு நடந்தை விதிகள்!

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை அரசியல்மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு “நடத்தை விதிகள்” (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் (Time Frame) செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்.

டங்ஸ்டன் ரத்து

மக்களின் துணையுடன் அரசுரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் மத்திய அரசை பணிய வைத்து டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சருக்கும், துணை நின்ற மக்களுக்கும் நன்றி.

இரும்பு காலம்

உருக்கு இரும்பு 5,370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது என உலகுக்கு அறிவித்த தமிழ்நாடு அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும்.

யூ.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை ஆளுநரே நியமிக்கும் அதிகாரத்தை வழங்கி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி திமுக மாணவரணியின் சார்பில் பிப்ரவரி 6 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும், திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள்.

வக்ஃப் சட்ட திருத்த மசோதா

சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இச்சட்டத் திருத்தம் மீண்டும் அவையில் கொண்டு வரப்படும்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீவிரமாக எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான நிதி

கடந்த நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமல் தாக்கல் செய்த மத்திய அரசு, இந்த முறை நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி, பேரிடர் நிதி உள்ளிட்டவற்றை ஒதுக்கீடு செய்யதிடவும், தமிழ்நாட்டிற்கு என்று முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை அறிவித்திடவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details