தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வான் நோக்கி சுடும் இலங்கை கடற்படை? ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு! - Rameswaram fisherman issue - RAMESWARAM FISHERMAN ISSUE

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் வான் நோக்கி சுட்டு விரட்டியடிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை கடற்படை ரோந்து படகு மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப் படகு
இலங்கை கடற்படை ரோந்து படகு மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப் படகு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 8:48 AM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்று, சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி அச்சுறுத்தி மீனவர்களை விரட்டி அடித்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இதனால் அச்சமடைந்த மீனவர்கள், தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விடுவார்களோ என்ற பயத்தில் மீன்பிடிக்காமல் கரை திரும்பி வருகின்றனர். இதனால் ஒரு படகிற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு சர்வதேச எல்லைப் பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பல் அதிகளவு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details