இராமநாதபுரம்:ஆன்மிக தளத்திற்குப் பெயர்போன ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.
அப்படி வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வதற்காக ஆட்டோ மற்றும் வாடகை கார் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செலவு செய்யக்கூடிய நிலையில் ஏற்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.