தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: பொள்ளாச்சி தொகுதியில் திமுக கே.ஈஸ்வரசாமி வெற்றி! - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Pollachi Lok Sabha Election Results 2024 : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி அபார வெற்றி பெற்றுள்ளார். மேலும், பொள்ளாச்சியில் பதிவான வாக்குகளின் முழு விபரத்தை காணலாம்..

பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்கள்
பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 7:33 PM IST

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளார் கே.ஈஸ்வரசாமி, அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை விட 2,52,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வ.எண்கட்சி பெயர்பெற்ற வாக்குகள்
1.திமுக வேட்பாளார் கே.ஈஸ்வரசாமி5,33,377
2. அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 2,81,335
3. பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 2,23,354
4. நாதக வேட்பாளர் சுரேஷ்குமார் 58,196

2024 நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி, அதிமுக சார்பில் கார்த்திகேயன், பாஜக சார்பில் வசந்த ராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ்குமார் போட்டியிட்டனர். திமுகவின் சிட்டிங் எம்.பியாக உள்ள கே.சண்முகசுந்தரத்திற்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2019 தேர்தலில் வென்றது யார்?:கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.சண்முகசுந்தரம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 230 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன், 3 லட்சத்து 78 ஆயிரத்து 347 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூகாம்பிகை 59 ஆயிரத்து 693 வாக்குகளையும். நாம் தமிழர் கட்சியின் சனுஜா 31 ஆயிரத்து 483 வாக்குகளையும் பெற்றனர்.

கடந்த தேர்தலில் 63.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை சுமார் ஏழு சதவீத வாக்குகள் அதிகரித்து 70.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல் முடிவுகளின்படி, பொள்ளாச்சி அதிமுக வலுவாக உள்ள தொகுதியாக உள்ளது. அதிமுக இங்கு இதுவரை ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியை திமுக கைப்பற்றியது.

இதையும் படிங்க: தேர்தல் 2024: அதிமுக Vs திமுக; பொள்ளாச்சியில் கோலோச்ச போவது யார்? - LOK SABHA ELECTION 2024

ABOUT THE AUTHOR

...view details