தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் அரசு ஊழியர் வெட்டிக்கொலை.. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - PANCHAYAT SECRETARY MURDER

திருநெல்வேலியில் ஊராட்சி செயலர், மர்ம நபர்களால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி செயலர் சங்கர்
படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி செயலர் சங்கர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2025, 7:10 PM IST

திருநெல்வேலி: வேப்பிலாங்குளம் அருகே ஊராட்சி செயலர் சங்கர், மர்ம நபர்களால் பட்டப்பகலில் வெட்டிக் படடுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பழவூரைச் சேர்ந்தவர் சங்கர் (53). இவர் வேப்பிலான்குளம் கிராம ஊராட்சியின் செயலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 03) திங்கட்கிழமை வழக்கம் போல் சங்கர் வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேப்பிலான்குளம் அருகே வந்த போது அரிவாளுடன் வந்த கும்பல் அவரை வழி மறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் வெட்டி படுகொலை செயதுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க:மனைவியை கண்டிக்காததால் மாமனார், மாமியாரை படுகொலை செய்த மருமகன்!

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார், உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்தில், கூடங்குளம் காவல் ஆய்வாளர் ரகுராஜன் மற்றும் ராதாபுரம் தாசில்தார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட சங்கர் பஞ்சாயத்து செயலர் என்பதால், பின்னணியில் சதி இருக்கிறதா? அல்லது சங்கருக்கு வேறு நபர்களுடன் பகை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பணகுடி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details