தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில் போட்டி.. வேளச்சேரியில் துணிக்கடைக்குள் காரை ஏற்றி கொலை முயற்சி!

தொழில் போட்டி காரணமாக வேளச்சேரியில் துணிக்கடைக்காரரை, சக துணிக்கடைகாரரே காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட துணிக்கடை மற்றும் காரின் சிசிடிவி காட்சி
பாதிக்கப்பட்ட துணிக்கடை மற்றும் காரின் சிசிடிவி காட்சி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 7:42 AM IST

சென்னை:தொழில் போட்டி காரணமாக வேளச்சேரியில் துணிக்கடைக்காரரை சக துணிக்கடைக்காரர் கொலை செய்ய முயன்று, காரை கடைக்குள் ஏற்றி சேதப்படுத்திய சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற நபரை தேடி வருகின்றனர். தற்போது இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னை வேளச்சேரி 5வது பிரதான சாலை, பேருந்து நிலையம் அருகில் ஜெபஸ்டின் (38) என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவருக்கு எதிரில் துணிக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவருக்கும் இடையில் தொழில் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (நவ.03) இரவு 11 மணியளவில் மது போதையில் காரை இயக்கி வந்த சிவகுமார், காரை கடையின் முன்பு நிறுத்திவிட்டு, கடையின் உரிமையாளர் ஜெபஸ்டினிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், ஜெபஸ்டினுக்கு கொலை மிரட்டல் விடுத்து காரை கொண்டு இடிக்க முயன்றுள்ளார்.

இதையும் படிங்க:நெல்லையில் மீண்டும் ஓர் நாங்குநேரி சம்பவம்: 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பல்!

காரைக் கொண்டு மோத வந்த நிலையில், ஜெபஸ்டின் மற்றும் கடையில் வேலை பார்க்கும் இஸ்மத் ஆகியோர் விலகிக் கொண்டதால் சிவக்குமார் காரை கடைக்குள் செலுத்தி சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து, சிவக்குமார் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில், கடையில் இருந்த கண்ணாடிகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இக்காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இக்காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து ஜெபஸ்டின் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காரில் தப்பி ஓடிய சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details