தமிழ்நாடு

tamil nadu

இயக்குநர் நெல்சன் வீட்டுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! - ARMSTRONG MURDER CASE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 1:58 PM IST

Armstrong murder case: பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்சன் மற்றும் அவரது மனைவி மோனிஷா, ஆம்ஸ்ட்ராங்
நெல்சன் மற்றும் அவரது மனைவி மோனிஷா, ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த வழக்கில் பொன்னை பாலு, வடசென்னை ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சுமார் 200 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆற்காடு சுரேஷ் மரணம் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என முதற்கட்டமாகத் தகவல் வெளியானது. ஆம்ஸ்ட்ராங் அரசியல் தலைவர் என்பதால் அரசியல் கொலையா? ரியல் எஸ்டேட் பிரச்சனையா? பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? உள்ளிட்ட வேறு ஏதாவது கொலைக்கான காரணமாக இருக்குமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பமாக இவ்வழக்கில் தொடர்புடைய மொட்டை கிருஷ்ணனுடன் பேசியதாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் சில தினங்களு்ககு முன் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடமும் காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

அடையாறில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற தனிப்படை போலீசார், நெல்சனிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும், மேலும் அவரின் மனைவியிடமும் தனியாக விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கேட்க கேள்விகளுக்கு, இயக்குநர் நெல்சன் அளித்த பதில்கள், அவரது மனைவி கூறிய பதில்களுடன் ஒத்துப்போகிறதா என்ற கோணத்தில் போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், மொட்டை கிருஷ்ணனிடம் மோனிஷா தொலைபேசியில் பேசியது குறித்து நெல்சனுக்கு தெரியுமா? என்பது பற்றியும் போலீசார் அவரிடம் விசாரித்ததாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல இயக்குநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பழனியில் துவங்கிய 'முத்தமிழ் முருகன் மாநாடு'..இரண்டு நாட்கள் என்னென்ன நிகழ்ச்சிகள்? இதோ முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details