தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது

Ariyalur Pocso case: அரியலூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதேப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

police arrested A youth in pocso case in Ariyalur
அரியலூர் இளைஞர் போக்சோவில் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 9:36 AM IST

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் நேற்று (பிப்.12) பள்ளி முடிந்து, நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் குடும்பத்தினர் பள்ளியில் விசாரித்துள்ளனர். அதற்கு மாணவி பள்ளிக்கு வரவில்லை எனப் பதிலளித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்மாணவியின் பெற்றோர், பல்வேறு இடங்களிலும் தங்களது மகளைத் தேடி வந்துள்ளனர். பின்னர், எங்கு தேடியும் மாணவி கிடைக்காததை அடுத்து, அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வராஜ் என்பவரின் மகன் தனராஜ்(24) என்பவர் காணாமல் போன மாணவியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தன்ராஜை என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details