வேலூர்:காட்பாடி அருகே 41 கார்களை திருடி வைத்து பிரித்து விற்ற மெக்கானிக்கை காட்பாடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவா (எ) தேவக்குமார் (41). இவர் மேல் வடுகன் குட்டை பகுதியில் கார் மெக்கானிக் ஷேட் வைத்துள்ளார். பகல் நேரங்களில் நகர் பகுதிகளில் நோட்டமிட்டு, இரவில் காரை திருடி வந்து இரவோடு இரவாக பிரித்து உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், திருட்டு கார்களை முழுமையாக போலி கார் எண்களை பயன்படுத்தி விற்பனையும் செய்து வருகிறார்.
இதையும் படிங்க:கொடுங்கையூர் வினோதினி.. கிலோ கணக்கில் கஞ்சா.. எப்படி வந்துச்சி? ரவுடியை தட்டித் தூக்கிய போலீஸ்!
இது குறித்து காட்பாடி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காட்பாடி நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி பெற்று, இன்று கார் மெக்கானிக் ஷேட்டை சோதனை செய்துள்ளனர். சோதனையில், 41 கார்கள் எந்த வித ஆவணமும் இல்லாமல் மெக்கானிக் ஷேட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 27 கார்களை உதிரிபாகமாகவும், மீதமுள்ள கார்களையும் விற்கவும் முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட கார்களின் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) இதனையடுத்து, காட்பாடி போலீசார் தேவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, கார் ஷெட்டில் இருந்த கார்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கார்களின் மதிப்பு ரூ.1 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் இது போன்று கார்களை திருடி பிரித்து விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.