தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார்ஜர் ஒயரால் மூதாட்டியின் கழுத்தறுத்து கொலை.. வியாசார்பாடியில் பகீர் சம்பவம்! - Old woman strangled to death

Old woman death: வியாசர்பாடியில் நகைக்கு ஆசைப்பட்டு வீட்டில் இருந்த மூதாட்டியை சார்ஜர் ஒயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 8:15 PM IST

சென்னை:வியாசர்பாடியில் வீட்டில் இருந்த மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் குறித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடி நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (82). இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜினி பாய் (78). இவர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) நாகராஜன் வீட்டில் தனது அறையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அவர் அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்த நிலையில், அவரது மனைவி சோபாவில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனடியாக நாகராஜன் இது குறித்து அவரது மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து மகள் வீட்டிற்கு வந்து பார்த்த நிலையில், அவரது கழுத்து சார்ஜர் ஒயரால் இருக்கப்பட்டுள்ளது. மேலும், காது அறுபட்ட நிலை மற்றும் பின் தலையில் காயம் இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகள், இது குறித்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த நிலையில், சரோஜினி பாய் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சரோஜினி பாய் வீட்டை சுத்தம் செய்ய மூன்று பேரை அழைத்துள்ளார். அவர்கள் சுத்தம் செய்து விட்டுச் சென்றுள்ளனர். அதற்கு ரூ. 2,500 பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சுத்தம் செய்ய வந்தவர்களில், கொருக்குப்பேட்டை பாளையம் எட்டாவது தெருவைச் சேர்ந்த மங்கம்மாள் அடிக்கடி இவர்களது வீட்டை வந்து சுத்தம் செய்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், மங்கம்மாளின் மகன் ஜீவா என்கிற முரளி நாகராஜன் வீட்டிற்கு குறிப்பிட்ட சம்பவம் நடந்த நேரத்தில் வந்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, இன்று காலை ஜீவா என்ற முரளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், நகைக்கு ஆசைப்பட்டு சரோஜினி பாய் வீட்டிற்குச் சென்று, செல்போன் சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி அவரது காதில் இருந்த ஒரு கம்மலை மட்டும் கழட்டி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முரளி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வழக்கறிஞர்கள்.. எழும்பூர் கோர்ட் வளாகத்தில் களேபரம்! - Lawyers Clash in Egmore Cour

ABOUT THE AUTHOR

...view details