தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3வது முறையாக பதவியேற்றபின் முதல்முறையாக தமிழகம் வரும் மோடி.. எதற்காக தெரியுமா? - Narendra Modi TN Visit - NARENDRA MODI TN VISIT

PM Modi Visit Chennai: சென்னை முதல் நாகர்கோவில் வரை வாரம் ஒரு முறை இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயிலானது தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி கோப்புப்படம்
பிரதமர் மோடி கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 4:18 PM IST

சென்னை:சென்னை ஐசிஎஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 30க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, திருவனந்தபுரம் - காசர்கோடு, சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை, தினசரி ரயில் சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்திடம் இதுகுறித்து பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில், இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூன் 20ஆம் தேதி சென்னை வரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி, ரயில்வே அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்குள்ள ரயில்வே அதிகாரிகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் சில அறிவுறுகளை வழங்கினர்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மோடி 20ஆம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, வந்தே பாரத ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க:"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்று".. அமைச்சர் பொன்முடி கூறியது என்ன? -

ABOUT THE AUTHOR

...view details