ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் சர்வதேச நீதி தினம் சோளிங்கர் வட்ட சட்டப் பணி குழு விழிப்புணர்வு முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி நித்யா தலைமையில், மாவட்ட நீதித்துறை நடுவர் நிலவரசன், வட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலையில் பாண்டியநல்லூர் பஞ்சாயத்து வாளகத்தில் நடைபெற்றது.
சோளிங்கர் மாவட்ட உரிமையியல் நீதிபதி நித்யா விழாவில் பேசியது (Credits - ETV Bharat Tamil Nadu) இதில் கலந்து கொண்ட மாவட்ட உரிமையியல் நீதிபதி நித்யா பேசுகையில், "பொதுமக்கள் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னையோ, உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னையோ, குற்றங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையோ பொதுமக்கள் குற்றங்கள் குறித்த நீதிமன்றத்தை நாடுவது குறைவாகவே உள்ளது.
பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தால் வழக்கறிஞர் வைப்பதற்கு போதிய நிதி வசதி இல்லாத பட்சத்தில் மக்களுக்கு இலவச வழக்கறிஞர்களை அரசு வழங்குகிறது. மேலும், தங்கள் பிரச்னைகளை வழக்கறிஞர்கள் கொண்டு சட்ட ஆலோசனை வழங்கவும் நீதிமன்றங்கள் தயாராக உள்ளது.
குற்றங்கள் குறைய சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களும் அப்படித்தான் உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் கல்யாணி ரகு ராமராஜ், அரசு வழக்கறிஞர்கள் சுதாகர் உஷா, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"கூட்டணியாக இருந்தாலும் கேள்வி கேட்போம்".. கே.பாலகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன?