விழுப்புரம்:நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி, கட்சிக் கொடியையும் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தார். தவெக கட்சி கொடியை அறிமுகப்படுத்திய தினத்தில் அன்றிலிருந்து பகுஜன் சமாஜ்வாதி கட்சி, யானை தங்களுக்கான சின்னம் என தொடர்ந்து போர்க்கொடி தூக்கி நீதிமன்றம் வரை சென்றது. மேலும், அதில் வரும் யானை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தவெக மாநாடு:இது ஒரு பக்கம் இருக்க, விஜய் பெரியாரை வணங்குகிறார், அம்பேத்கர் வணங்குகிறார், எனவே அவர் திராவிடத்தை நோக்கிச் செல்கிறார் என பாஜக சார்பில் இருந்து ஒரு சில குரல் எழுந்து வருகிறது. இதனிடையே, தவெகவின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தலைவர்களின் கட்- அவுட்: இதற்காக தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக பணி செய்து வந்தனர். 85 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இம்மாநாட்டிற்கு 5 நுழைவு வாயில்களும், வெளியே செல்வதற்கு 15 வழிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாடு நடைபெறக்கூடிய பகுதியில் வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர், தமிழன்னை மற்றும் தமிழ் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஆகியோரின் கட் அவுட்களுடன் விஜயின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள், அரசியல் கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் என அனைவரிடத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த மாநாடு இன்று நடைபெறுகிறது.
தவெக தொண்டர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) பிரமாண்ட ஏற்பாடுகள்:பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டிற்கு இன்று அதிகாலையில் இருந்தே தொண்டர்களும், பொது மக்களும், விஜய் ரசிகர்களும் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மிக்சர் அடங்கிய பையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. உணவும் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இம்மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர்.
தவெக தொண்டர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:விஜயின் தவெக முதல் மாநில மாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் துபாய் நிறுவனம் பற்றி தெரியுமா?
எவ்வளவு நேரமானாலும், காத்திருப்போம்: ”கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் இருந்து வந்திருந்த பெண்கள் கூறுகையில், “விஜயை பார்க்க வேண்டும், அவர் பேசுவதை கேட்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளோம். அவர் மக்களுக்கு வேண்டியதை செய்வார். நம்பிக்கை உள்ளது. 2026இல் அவர் முதலமைச்சராவார். நடிகர் என்பதையும் தாண்டி, அவர் நல்ல மனிதன். அதனால் மக்களுக்கு கண்டிப்பாக நல்லதை செய்வார். அவர் வருவதற்கு எவ்வளவு நேரமானாலும், காத்திருந்து அவரை பார்த்துவிட்டு தான் செல்வோம்” என்றனர்.
தவெக தொண்டர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) 2026இல் முதலமைச்சராவார்:கும்மிடிபூண்டி பகுதியில் இருந்து வந்த சம்பத் கூறுகையில், ”தமிழ்நாட்டை திருத்த வந்த கடவுள் தான் விஜய். 2026இல் கண்டிப்பாக முதலமைச்சராவார். ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாரு என்பதெல்லாம் பொய். விஜய் வருவார் மக்களுக்கு நல்லது செய்வார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் சினிமாவை தவிர்த்து விட்டார். மற்ற கட்சி மாநாடுகளுக்கெல்லாம் வராத கூட்டம் விஜய் மாநாட்டிற்கு வந்துள்ளது” என்றார்.
தவெக தொண்டர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) 15 வருட தவம்:தருமபுரியில் இருந்து வந்திருந்த தவெக தொண்டர்கள் கூறுகையில், “நாங்கள் 50 பேர் தருமபுரியில் இருந்து வந்துள்ளோம். விஜய்யின் அரசியல் வருகை என்பது 15 வருட தவம். அதனால் ஆர்வத்துடன் காலை 5 மணிக்கே மாநாட்டு திடலுக்கு வந்துவிட்டோம். விஜய் எப்போதுவருவார் என ஏங்கி இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் நாங்களும் காத்திருக்கிறோம்” என்றார்.
தவெக தொண்டர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) பெண்களே அதிகம்:ஈரோடு மாவட்டம் சென்னிமங்கலத்தில் இருந்து வந்திருந்த வந்திருந்த தொண்டர்கள் கூறுகையில், “ எங்கள் ஊரில் இருந்து சுமார் 450 பேர் வந்திருக்கிறோம். விஜய்க்காக நாங்கள் வந்துருக்கிறோம். இது காசுக்காக கூடிய கூட்டம் இல்லை. விஜய்க்காக கூடிய கூட்டம். விஜய்யின் பின்னால் அதிகமானோர் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக வந்துருக்கிறோம். இது மாநாடு கிடையாது திருவிழா. எங்களில் ஊரில் இருந்து ஆண்களை விட பெண்கள் அதிகமானோர் வந்துருக்கிறோம்” என்றார்.
விஜய்யின் ரசிகை பாண்டிமீனா கூறுகையில், “விஜய்யின் நடிப்பு மிகவும் பிடிக்கும். என்னால் முடிந்த அளவிற்கு பெண்களை தவெக மகளிரணியில் இணைத்து விடுவேன். இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்” என்றார்.
இந்த நாள் தீபாவளியை விட ஸ்பெஷல்:தருமபுரியைச் சேர்ந்த ரசிகை சசிபிரியா கூறுகையில், ”விஜயை பார்க்க வேண்டும் என நேற்று இரவே இங்கு வந்துவிட்டோம். அவருக்காக தான் காத்திருக்கிறோம். இன்றைய நாள் தீபாவளியை விட மிகவும் ஸ்பெஷல். 2026இல் கண்டிப்பாக அவர் தான் முதலமைச்சராவார். அதில் 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது” என்றார்
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்