தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற உதவியாளரின் மகன் சிவில் நீதிபதியாக தேர்வு.. பழனியில் நெகிழ்ச்சி சம்பவம்! - Civil Judge Exam

பழனி நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை செய்யும் பெண்ணின் மகன் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உதவியாளரின் மகன் நீதிபதி
நீதிமன்ற உதவியாளரின் மகன் நீதிபதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 4:12 PM IST

நீதிமன்ற உதவியாளரின் மகன் நீதிபதி

திண்டுக்கல்:தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பழனி நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை செய்யும் பெண்ணின் மகன் சக்தி நாராயணமூர்த்தி, சிவில் நீதிபதி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல், பழனி தெற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நீதிமன்றத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் 15 வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில், சக்தி நாராயணமூர்த்தி (28) என்பவர் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வினை எழுதி அதில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது சகோதரர், பழனியில் பட்டாலியன் பயிற்சி பள்ளியில் காவலராக பணியாற்றி வருகிறார்.

சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதியாக தேர்வானது குறித்து சக்தி நாராயணமூர்த்தி கூறியதாவது, “ நீதிமன்றத்தில் நீதிபதி வரும்போது தனது தாயும், அனைவரும் எழுந்து நிற்பார்கள். நீதிபதிக்கு உரிய மரியாதை கிடைப்பதால் நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. இதனால், நீதிபதி தேர்வுக்கு ஆயத்தமாக பயிற்சி எடுத்து வந்தேன்.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பை முடித்தேன். படிக்கும் போதே சென்னையில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தேன். 2019 ஆம் ஆண்டு பழனியில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்த நிலையில், சிவில் நீதிபதி தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்தேன்.அதனைத்தொடர்ந்து, சிவில் நீதிபதி தேர்வுக்கு பயிற்சி பெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தன்னுடைய தாய் மற்றும் மனைவியின் ஆதரவோடு வெற்றி பெற்றேன். தேர்தலில் வெற்றி பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க:வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர மனமில்லாத மு.க.ஸ்டாலின்? - வன்னியர் சங்கம் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details