தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு தேங்காய் ரூ.62,000.. போடி முருகன் கோயிலில் திகைத்த பக்தர்கள்! - Coconut Auction Bodi - COCONUT AUCTION BODI

Coconu auction in Bodi: தேனி மாவட்டம் போடியில் உள்ள ஒரு முருகன் கோயிலில், ஒரு தேங்காய் 62,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 8:40 PM IST

தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது, அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோவில். சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் போடி நாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு, தற்போது இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இங்கு கடந்த வாரம், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செய்யப்பட்டு, பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வள்ளிக்கும், முருகப் பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்தத் திருக்கல்யாண நிகழ்ச்சியின், முக்கிய திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. அப்போது, ரூபாய் ஐந்தாயிரத்தில் தொடங்கிய தேங்காய் ஏலம், நிறைவாக ரூபாய் 62 ஆயிரம் வரை கேட்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் - கவிதா வள்ளியம்மை தம்பதி, இந்த ஒற்றைத் தேங்காயை ரூபாய் 62 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.

கடந்த தைப்பூசம் மறுநாள் நடைபெற்ற தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் ஏலம் விடப்பட்ட தேங்காய் ரூபாய் 32,000க்கு விலை போனது. இது தவிர, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் இன்று சுவாமி முன்பு உடைக்கப்பட்டதில், தேங்காய் முற்றிலும் அழுகாமல் காய்ந்த நிலையில் ஓடுடன் ஒட்டிக்கொண்டு எந்த குறைபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் சிவாச்சாரியார், அந்த தேங்காயை பக்தர்களுக்கு காண்பித்தபொழுது அனைவரும் ‘அரோகரா’ கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.

இதையும் படிங்க:பங்குனி உத்திரம்; கோலாகலமாக நடைபெற்ற பழனி தேரோட்டம்! - Panguni Uthiram Therottam At Palani

ABOUT THE AUTHOR

...view details