தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடலூரில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு! - elderly man killed by elephant - ELDERLY MAN KILLED BY ELEPHANT

Gudalur: கூடலூர் அருகே தேவாலா அட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பழனியாண்டியை, குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் புகைப்படம்
யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் புகைப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 5:42 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா அட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. 83 வயதான இவர், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பழனியாண்டி உள்ள குடியிருப்பின் பின்பகுதியில் உள்ள சமையலறைக்குள் நுழைந்துள்ளது.

அப்போது இதனை அறியாத பழனியாண்டி சமையலறைக்குள் செல்லும்போது, காட்டு யானை மிகுந்த ஆக்ரோசத்துடன் கொடூரமாக அவரை தாக்கி உள்ளது. இதில் உடல் நசுங்கிய நிலையில் பழனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், காட்டு யானையை விரட்டியுள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், பழனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், தங்களது கிராமப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:யானையை விரட்டச் சென்ற பல்கலை காவலாளியை துரத்திய யானை.. கீழே விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்! - Elephants In Bharathiyar University

ABOUT THE AUTHOR

...view details