தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை: நாளை ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்..! - MADURAI TRAIN SERVICE CHANGE

மதுரை கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக நாளை ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் (கோப்புப்படம்)
ரயில் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2025, 8:11 PM IST

மதுரை: மதுரை கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக நாளை (ஜன.9) ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பில், மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை அன்று (ஜனவரி 9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றன. இந்தப் பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய ஒன்பது ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது.

அதன்படி, செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), நாகர்கோவில் - மும்பை ரயில் (16352), மதுரை - பிகானிர் ரயில் (22631), நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர ரயில் (16321), குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் (16128), கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர ரயில் (16322), ஓகா - ராமேஸ்வரம் ரயில் (16734), மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847), திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக‌ மாற்றுப்பாதையில் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை - மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில்கள் மானாமதுரை மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களிலும் மற்ற ரயில்கள் மானாமதுரை ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.

இதையும் படிங்க:டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரயில்கள் தாமதம்

மதுரை திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஜனவரி 9 அன்று மதுரையிலிருந்து மாலை 5.50 மணிக்கு தாமதமாக புறப்படும். நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் ரயில் ஜனவரி 9 அன்று நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு காலதாமதமாக புறப்படும். திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி ரயில் ஜனவரி 10 அன்று திருச்செந்தூரில் இருந்து மாலை 03.40 மணிக்கு தாமதமாக புறப்படும்.

ரயில்கள் பகுதியாக ரத்து

ஜனவரி 10 அன்று மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய ஓகா ரயில் (09519) மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 9 அன்று பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு ரயில்கள் (16731/ 16732) திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது'' என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details