தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ்நாட்டின் பலத்தை குறைக்கும் மோடியின் சதித் திட்டம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

CM Stalin criticizing bjp govt: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி எனக்கூறி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 2:54 PM IST

சென்னை:டெல்லியில் சென்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டு மே 28ஆம் தேதி திறக்கப்பட்டது. மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் கட்டப்பட்டிருந்த புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உத்தேச கணிப்பு:ஆளும் பாஜகவின் திட்டப்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் போது தென்னிந்தியா மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், பாஜக எதிர்ப்பு அதிகமுள்ள தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகபட்சம் 8 உறுப்பினர்களின் குறைக்கப்படும் என்றும், பாஜக ஆதரவு அதிகம் இருக்கும் மாநிலங்களான உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்சம் 11 உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தனியார் செய்தி நிறுவனம் ஒரு உத்தேச கணிப்பை வெளியிட்டுள்ளது.

எப்போதும் விடியல் இல்லை:இதனை குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை எனக்கூறி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

தலைக்கு மேல் தொங்கும் கத்தி:பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

மோடி அரசு மதிப்பதில்லை: மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி:இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பாஜக அரசு செல்லாக் காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார்:மோடியின் பாஜக-வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுக-வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜக-வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அதிமுக-வையும் புறக்கணிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'பிரதமர் மோடியும், பாஜகவும் நாட்டும் வீட்டுக்கும் கேடு' - மு.க.ஸ்டாலின் விமர்சனம் - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details