சென்னை: சென்னை கண்ணகி நகர் பகுதியில் ஆரோக்கியதாஸ் - நிஷாந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் அரசு சார்பில் குழந்தைக்கு திட்டங்கள் உள்ளது. அதை நான் வாங்கி தருகிறேன் என்று கூறி நிஷாந்தியை சென்னை தியாகராய நகர் பகுதிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அந்த பெண் தியாகராய நகரில் ஆட்டோவில் இருந்து இறங்கி, நிஷாந்தியை (குழந்தையின் தாய்) குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கெட் வாங்கி வர சொல்லி 100 ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்நிலையில், நிஷாந்தி பால் மற்றும் பிஸ்கெட் வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பெண் மற்றும் தனது குழந்தை மாயமானதை உணர்ந்த நிஷாந்த்தி சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் குழந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஓபிஜி குழுமத்தில் கட்டுகட்டாக பணம்; அமலாக்கத்துறை சோதனையில் பிடிபட்டது எப்படி?
இந்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, கண்ணகி நகர் ஆய்வாளர் தயாளன் தலைமையில் தனிப்படை அமைத்து ஆட்டோவில் குழந்தையை கடத்தி சென்ற வழியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு பெண் ஒருவர் ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
அப்பகுதி மக்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) மேலும், அந்த குழந்தையைச் சேர்ந்த பெண் மாயமானதாக மருத்துவமனை சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தையை அடையாளம் காண தாய் நிஷாந்தி அழைத்துவரப்பட்டார். அங்கு அது நிஷாந்தியின் குழந்தைதான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் குழந்தையை மீட்டு தாய் நிஷாந்தியிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் கூறுகையில், “பொதுவாக எங்கள் தெருவில் அங்கன்வாடி ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்கள் இது போன்று பிரசவத்திற்கு அரசு தரும் சலுகைத் தொகைகளை எங்களுக்கு பெற்றுத் தருவார்கள். அது போன்று தான் அந்த பெண் செய்கிறார் என நினைத்தோம். இரண்டு நாட்களாக இங்கு தான் இருந்தார். எங்களிடம் கேட்டார், ‘யார் இங்கு புதிதாக மகபேறு முடித்து வந்துள்ளார் என்று, நாங்கள் தான் ஆரோக்கியதாஸ் - நிஷாந்தி தம்பதியர் குறித்து கூறினோம்’. ஆனால் இது போன்று நடக்கும் என நினைக்கவில்லை,” என்றார்.
அப்பகுதி மக்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்