மக்களவைத் தேர்தல் 2024: நாமக்கலில் மகுடம் சூடிய கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன்! - Lok Sabha Election Results 2024
Namakkal Election Results 2024 : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 29 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். மேலும், நாமக்கல்லில் பதிவான வாக்குகளின் முழு விபரத்தை காணலாம்...
நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் (CREDIT - ETVBharat TamilNadu)
நாமக்கல்:நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் அதிமுக வேட்பாளரை விட 29,112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வ.எண்
கட்சி பெயர்
பெற்ற வாக்குகள்
1.
திமுக கூட்டணி, கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் (வெற்றி)
4,62,036
2.
அதிமுக (எஸ்.தமிழ்மணி)
4,32,924
3.
பாஜக (கே.பி.ராமலிங்கம்)
1,04,690
4.
நாதக (கனிமொழி)
95,577
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்,நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் பரமத்திவேலூரில் சமையல் எண்ணெய் தொழிற்சாலை நடத்திவரும் ராஹா தமிழ்மணி, திமுக சார்பில் கடந்தமுறை போன்று அதன் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் மாதேஸ்வரன், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமொழி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி 36 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 40 வேட்பாளர்கள் களமாடினர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் எஸ்.தமிழ்மணி 24,118 வாக்குகளுடன் முன்னிலை வகித்தார். இவருக்கு அடுத்தப்படியாக, கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 22,929 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். முன்னதாக, திமுக கூட்டணியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குறிப்பிட்ட ஒரு சமூகம் தொடர்பாக பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில் வேட்பாளர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தலில் வென்றது யார்?: நாமக்கல் தொகுதியில் கடந்த கடந்தமுறை இத்தொகுதியில் திமுக கூட்டணியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி சின்ராஜ் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த காளியப்பனை விட 2 லட்சத்து 65 ஆயிரத்து 151 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கடந்த முறை இத்தொகுதியில் 83.1 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 2024 தேர்தலில் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.