கோயம்புத்தூர்: மைவி3 நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக, கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு 10 புதிய வாகனங்கள் வழங்கும் துவக்க விழா இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் கலந்து கொண்டு வாகனங்களை வழங்கினார்.
பின்னர், மைவி3 நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் கூறியதாவது, “ஹெல்த் கேர், ஹோம் கேர் உள்ளிட்ட 87 விதமான பொருட்கள் விற்பனை செய்து வருகின்றோம். தமிழகத்தை 9 மண்டலமாகப் பிரித்து செயல்பட்டு வருகிறோம். மாநகர குற்றப்பிரிவு விசாரணை குறித்த கேள்விக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தம், தன்னிடம் உள்ள கூட்டத்தின் சந்தேகத்தால், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பாக இருக்கலாம். பொதுவாக தொழிலில் நெருக்கடி இருக்கிறது. எனவே, வளர்ச்சியைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்களிடமிருந்து நாங்கள் வெளி வருவோம்.
மைவி3 டிவி நிறுவனத்தில், நான் முதலில் வேலை செய்துள்ளேன். இடையில், கரோனா காலத்தில் ஒரு சில தடங்கல்கள் இருந்தது. இதனால், தான் தனியாக my v3 ads marketing என்ற புதிய நிறுவனத்தை தொடங்கினேன். நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளவர்கள் உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தனர் என்று கேள்வி எழுப்பினார். அவர்கள் தன் வளர்ச்சியைக் கண்டு இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.