டெல்டா மாவட்டத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் தொழுகும் வீடியோ (Credits to ETV Bharat Tamil Nadu) தஞ்சாவூர்: கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்த துவங்கிவிட்டது. அந்த வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், வரலாறு காணாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. மேலும், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் கால்நடைகள், விலங்கினங்கள் என அனைத்து உயிரினங்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், இனிவரும் காலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டு தமிழ்நாட்டில் பருவமழை பொழிய வேண்டும் எனவும், மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டு, தஞ்சையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜமாத்து உலமா சபை சார்பில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். இந்த சிறப்புத் தொழுகையில் 250க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அடுத்த 7 நாட்களுக்கு நோ ப்ராப்ளம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்!