தேனி : தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் அமைந்ததுள்ளது பாலசுப்ரமணியம் திருக்கோயில். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து பிடி மண் எடுத்து வரப்பட்டு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த திருக்கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று( நவ 8) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இன்று( நவ 8) முருகனுக்கும், இந்திரனுடைய மகளான தேவயானிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
தேங்காய் ஏலம் எடுத்த பக்தர் முருகேசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவம் நிறைவடைந்ததும், திருமாங்கல்யம் வைக்கப்பட்டிருக்கும் ஒற்றைத் தேங்காய் ஏலத்தில் விடப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டும் திருக்கல்யாண வைபவம் நிறைவு பெற்றதும் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றைத் தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.6,001ல் தொடங்கிய ஏலம் படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை தாண்டியது.
இதையும் படிங்க :"தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டின்கீழ் விரைவில் சிகிச்சை" - இயக்குநர் தகவல்!
மேலும், பக்தர்கள் ஏலம் கேட்பதில் ஆர்வமானதால் தொகையும் அதிகரித்து சென்றது. ஒரு லட்சம், இரண்டு லட்சம் ஆக மாறி, இரண்டு லட்சம் மூன்று லட்சமாக மாறி நிறைவாக திருமாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றைத் தேங்காய் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் தம்பதியினர் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஒற்றை தேங்காயை ஏலத்தில் எடுத்தனர்.
கடந்த கந்த சஷ்டி விழா நிறைந்து நடைபெற்ற ஏலத்தில் ஒற்றைத் தேங்காய் ரூ. 36 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இந்த வருடம் இந்த தேங்காய் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது மிக அதிகபட்ச தொகையாகும். இந்த ஏலத்தில் பக்தர்கள் அனைவரும் ஏலத்தொகையை ரூ. 3 லட்சத்து 3 ஆயிரம் தொகை என்பதை அறிந்து மெய்சிலிர்த்து 'அரோகரா அரோகரா' என கோஷமிட்டு முருகப் பெருமானை வணங்கி வழிபட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்