சென்னை:மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டத்தால் தமிழ்நாட்டில் 1.50 கோடி பேர் கடன் பெற்று தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் என்றும், முத்ரா கடன் திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
"வடகிழக்கு மாநிலங்களை வளம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய பாதையில் அழைத்து செல்வது" எனும் தலைப்பில் சென்னை ஐஐடியில் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது சென்னை ஐஐடியில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவ, மாணவிகள் தங்கள் பாரம்பரியப்படி உடை அணிந்து மேடை முன் சென்று ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:
முத்ரா கடன் திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - GOVERNOR RN RAVI
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தால், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
![முத்ரா கடன் திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! ஆளுநர் ரவியை சந்தித்த சென்னை ஐஐடி-யில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/1200-675-23520214-thumbnail-16x9-governer-new-aspera.jpg)
ஆளுநர் ரவியை சந்தித்த சென்னை ஐஐடி-யில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் (ETV Bharat Tamilnadu)
Published : Feb 11, 2025, 4:37 PM IST
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை மேம்பாடு அதிகளவில் செய்யப்பட்டுள்ளதால், வடக்கிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களும் சென்னை போன்ற பகுதிகளுக்கு வர முடிகிறது. விமான நிலையங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.