தமிழ்நாடு

tamil nadu

அரியலூரில் தாய் மற்றும் 3 குழந்தைகள் சடலங்களாக மீட்பு! மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணை.. - Ariyalur Family Death

Ariyalur Family Death: அரியலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகளில் உடல், உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 1:47 PM IST

Published : Apr 13, 2024, 1:47 PM IST

Ariyalur
அரியலூர்

அரியலூர்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே உள்ள வளவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜா மனைவி பானுமதி. கணவர் ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவி பானுமதி, 7ஆம் வகுப்பு படிக்கும் மகன் பிரசாத் மற்றும் 2 வயது இரட்டை குழந்தைகளான சாத்விக், சாத்விகா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் ராஜாவுக்கும், பானுமதிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், பானுமதியின் வீடு கடந்த இரண்டு நாட்களாகவே பூட்டி இருந்துள்ளது. இந்நிலையில், பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டைத் திறந்து பார்க்க முயன்றுள்ளனர்.

அப்போது, வீட்டின் கதவு உள் பக்கமாகப் பூட்டி இருந்த நிலையில், கதவை உடைத்துப் பார்த்த போது, மூன்று குழந்தைகள் தரையிலும், தாய் பானுமதி தூக்கிலும் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, பானுமதி, சாத்விக், சாத்விகா, பிரசாத் ஆகிய நான்கு பேரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், அரியலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகளில் உடல், உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, தற்போது மீன்சுருட்டி போலீசார், இது தற்கொலையா? திட்டமிட்ட கொலையா? அல்லது இறப்புக்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:'கச்சத்தீவோடு தாரை வார்க்கப்பட்ட பாரம்பரிய மீன் பிடி உரிமை' - திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன் - Lok Sabah Election 2024

ABOUT THE AUTHOR

...view details