சென்னை: சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதத்தின் ஐந்தாம் நாளான இன்று (ஜூன் 25), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக 110 விதியின் கீழ் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக அதாவது 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
இதையும் படிங்க:தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் வெளியான 14 புதிய அறிவிப்புகள் என்னென்ன? - TN Assembly 2024 Session
இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக 17,595 பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (TET) மூலமாக 19,260 ஆசிரியர் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்கள் என வரும் 2026 ஜனவரி மாதத்திற்குள் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும்.
இதனைத் தவிர சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்கள் என மொத்தமாக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் வெளியான 14 புதிய அறிவிப்புகள் என்னென்ன? - TN Assembly 2024 Session