விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் உரிய நேரத்தில் பணிகள் நிறைவடையாமல் இருந்ததால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதனனையடுத்து விவசாய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சென்னம்பட்டி அணைக்கட்டு கனவுத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு குரல் கொடுத்தார். இந்நிலையில் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறை மானிய கோரிக்கையிலிருந்து இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து சுமார் 15 கோடி செலவிட்டில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. முன்னதாக கடந்த மாதம் "சென்னம்பட்டி அணைக்கட்டு - வலது கால்வாயை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இத்திட்டத்தினால் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் உள்ள 19 கண்மாய்களுக்கு நீர் கிடைக்கும்.