சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜன.29) முடிவடைந்ததால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.