தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிட மாடல்; விஜய் கருத்துக்கு அரசியல் மேடைகளில் எதிர்வினை ஆற்றுவோம் - அமைச்சர் பெரிய கருப்பன்!

அரசியல் மேடைகளில் எதிர்வினை ஆற்றுவோம் என்று திராவிட மாடல் குறித்த விஜயின் கருத்துக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார்.

தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை
தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை:கூட்டுறவு அங்காடியில் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று (அக்.28) தொடங்கி வைத்தார்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தேனாம்பேட்டை டி.யு.சி.எஸ். காமதேனு கூட்டுறவு அங்காடியில் இன்று நடைபெறும் கூட்டுறவு கொண்டாட்டம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது என்றும் 3 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"விஜய் பாஜகவின் C- டீம்.. தவெக மாநாடு மிகப் பிரமாண்டமான சினிமா சூட்டிங்" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

மேலும், கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை கூட்டுறவுத் துறை சேவையாக செய்து வருகிறது. மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் வழக்கும் தரமான நிறுவனம் தான் இந்த கூட்டுறவு சங்கம். அதிரசம், முறுக்கு செய்யும் தொகுப்பு 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குடும்ப தலைவிகளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

அத்துடன், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பசுமை பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு ரூ. 20 கோடி அளவுக்கு பட்டாசு விற்பனையை எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திராவிட மாடல் குறித்து விமர்சனம் செய்துள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசியல் நிகழ்ச்சிகளில், விஜயின் கருத்துக்கு திமுக தலைவரோ அல்லது நாங்களோ எதிர்வினை ஆற்றுவோம் என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details