தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் பிரமாண்டமாக தயாராகிவரும் பறவைகள் பூங்கா; அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு! - Minister KN Nehru - MINISTER KN NEHRU

Minister K.N.Nehru supervised Trichy Birds park: திருச்சியில் நடைபெற்றுவரும் பறவைகள் பூங்கா கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

பறவைகள் பூங்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு
பறவைகள் பூங்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 12:41 PM IST

திருச்சி: சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 'நமக்கு நாமே' திட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி கம்பரசம்பட்டை ஊராட்சிக்குட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணியினை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பூங்காவில் செயற்கையான முறையில் அருவிகள் மற்றும் குளங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பூங்காவில் அரிய வகை பறவைகளும் வளர்க்கப்பட உள்ளன.

தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், வரைபடங்கள் எனப் பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதில் 50 பேர் உட்காரும் வகையில், அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படவும் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத் தளங்கள் மிகக் குறைவாகவுள்ளதால், தற்போது சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த பறவைகள் பூங்கா அமைய உள்ளது. இப்பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் அங்கு நடைபெற்றுவரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், சிறந்த முறையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:திருச்சியில் சிப்காட்.. டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - டி.ஆர்.பி.ராஜா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details