மதுரை:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அரசியலில் மிகுந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அவர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கும், எனக்கும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகப் பராமரிப்பு பணிகள் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (டிசம்பர் 16) திங்கட்கிழமை ஆய்வு செய்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பாலங்களின் உறுதித் தன்மையைப் பொறுத்தவரை எந்தவித சந்தேகமும் இல்லை. சாலைகளின் மீது கட்டப்படும் மேம்பாலங்களுக்கும், ஆறுகளின் குறுக்கே கட்டப்படும் பாலங்களுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளது. ஆற்றின் குறுக்கில் கட்டப்படும் பாலங்கள் தண்ணீர் போக்கை கணக்கில் கொண்டு அமைக்கப்படுகின்றன.
எந்த எதிர்பார்ப்பையும் மீறி 52 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகின்ற இடத்தில், இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் பெருகினால், பாலங்கள் விரிசல் விடுவதற்கும், அடித்துக்கொண்டு செல்வதற்கும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச கன அடி நீரை கணக்கில் கொண்டு பாலம் கட்டுவதால், திட்ட மதிப்பீடு செலவு 4 மடங்கு கூடுதலாகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதற்கு இடம் தராது. தண்ணீரில் பாலம் அடித்துச் செல்லப்படுவது தரம் இல்லை என அர்த்தமில்லை," என்றார்.
ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதி பெற வேண்டுமா?
ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு, பதில் அளித்த அவர், "கடந்த 2001 -ல் மங்களூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று திருமாவளவன் சட்டமன்றத்திற்கு வந்தபோது அவரின் பக்கத்து இருக்கையில் தான் நான் இருந்தேன். அன்று முதல் எனக்கும் அவருக்கும் நட்பு என்பதைத் தாண்டி, சகோதர பாசத்துடன் பழகக் கூடியவர் திருமாவளவன்.
இதையும் படிங்க:திருமா அண்ணனின் விமர்சனத்தை ஆலோசனையாக ஏற்கிறேன் - ஆதவ் அர்ஜுனா