தமிழ்நாடு

tamil nadu

ஆந்திரா டூ தமிழ்நாடு - மினி பஸ்சில் சாராயம் கடத்தியவர்கள் போலீசில் சிக்கியது எப்படி? - illicit liquor smuggling

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 7:13 PM IST

illicit liquor smuggling in Vaniyambadi: தமிழகம் - ஆந்திரா எல்லை பகுதியில் சட்ட விரோதமாக காய்ச்சப்பட்ட சாராயத்தை வாணியம்பாடிக்கு மினி பஸ் மூலம் கடத்தி கொண்டு வந்த பேருந்து ஓட்டுந்ர மற்றும் நடத்துநரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய பேருந்து மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்
கடத்தலுக்கு பயன்படுத்திய பேருந்து மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான தேவராஜபுரம், வீரணமலை ஆகிய மலை கிராமங்களுக்கு வாணியம்பாடியில் இருந்து தினந்தோறும் மினி பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக - ஆந்திர எல்லையில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்பட்டு அதனை மினி பஸ்கள் மூலம் கொண்டு வந்து வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விற்பதாக வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அத்தகவலின் அடிப்படையில், வனத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் நான்கு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, காவல்துறையினர் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தமிழகத்திலிருந்து ஆந்திர மாநில எல்லை பகுதிக்கு சென்று வரக்கூடிய தனியார் மினி பஸ்சில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பேருந்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர், உடனடியாக அந்த தனியார் மினி பஸ்சை சுற்றிவளைத்து, கடத்தப்பட்ட சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அப்பேருந்தின் ஓட்டுநர் ஏமாந்திரி மற்றும் நடத்துநர் சோபன் பாபு ஆகியோரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பெண்கள் தான் குறி! சென்னையை அதிரவைக்கும் சைபர் மோசடி

ABOUT THE AUTHOR

...view details