தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு?: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - ஐகோர்ட் கேள்வி! - MADRAS HIGH COURT

சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேட்டு செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 7:05 AM IST

சென்னை:சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேட்டு செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த பணிக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஐரான வழக்கறிஞர் புகழேந்தி, "தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக, மத்திய தணிக்கை துறை கூறியது எனத் தெரிவித்து அதுதொடர்பாக செய்திதாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார்".

இதையும் படிங்க:புழல் சிறை கைதியின் 'தாடி' வழக்கு; சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு..!

இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது எனக்கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார்.

அதையடுத்து, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த முறைக்கேடு தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details